தென்காசி: பொதுமக்களிடையே சைபர் கிரைம், ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனியார் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியானது தென்காசி மேம்பாலம் வழியாக கோவில் வாசலில் நிறைவு பெற்றது.