திருநெல்வேலி: தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி, சைபர்கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. D. அசோக் குமார்., அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.V. ரமா அவர்கள் தலைமையிலான மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய கருத்தரங்கில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு குறித்தும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிப்படையாமல் இருக்க அவர்களுக்கு சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை FX பொறியியல் கல்லூரியில் சுமார் 450 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசந்திரன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்க முக்கிய அறிவுரைகளை வழங்கியும், சைபர் கிரைம் காவல் துறையினர் நடத்திய ஓவிய போட்டி, திறன் அறியும் போட்டி, கட்டுரை போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பின் சிறப்பு விருந்தினராக Xavier College, Department of criminology and forensic science டாக்டர். சண்முகசுந்தரம் அவர்கள் சைபர் கிரைம் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது நடக்கும் சைபர் கிரைம் குறித்தும் அதிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கூறி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்சியில் கல்லூரி முதல்வர் திரு. வேல்முருகன் அவர்கள், கல்லூரி HOD திரு. அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள், பேராசிரியர் திரு. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சுமார் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.