தேனி : தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும், தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்புக், ஏடிஎம் கார்டு நம்பரை அனுப்பக்கூறியும், வெரிஃபிகேஷன் கால் வந்தவுடன் OTP எண்ணை கேட்டதாகவும் கொடுத்த சில மணி நேரங்களில் தனது வங்கி கணக்கிலிருந்து 20,000/- ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் தேனி மாவட்ட தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக் அவர்கள் அறிவுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.R.அரங்கநாயகி அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.S.தாமரைகண்ணன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு இழந்த 20,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.