கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் தினேஷ்வர். B.Com CA முடித்துவிட்டு chartered Accountant படித்துவரும் இவரிடம் அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு Treading செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ.70,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றிய நபரின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து பணம் ரூ.70,000/- த்தை மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி.,I.P.S அவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் பணத்தை நேரில் வழங்கினார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்