விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்ததின் பேரில்,
காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
*இந்த செயலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.