கோவை: கொரோனா தொற்று காலத்தில் நிவாரண தொகையாக தமிழக அரசு ரூ 4ஆயிரம் வழங்கியது போல மத்திய அரசும் ரூ.6,700 நிவாரண நிதி வழங்க உள்ளதாக கூறி வருகின்றனர்.
அவர்கள் தங்களை மத்திய அரசின் ஊழியர்கள் எனவும், கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாகவும் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். பொதுமக்கள் இது குறித்து விவரம் கேட்கும் பட்சத்தில் அவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள்.
பின்னர் சில மணி நேரத்தில் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்து மோசடி செய்து வருகின்றனர் .என்று பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கூறினர்.