சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சேர்ந்த ராமமூர்த்தி வயது (24) என்பவரின் தொலைபேசி 9791553358 எண்ணிற்கு +63 9368673830 எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அமேசான் மிஷன் ஹால் என்ற வெப்சைட்டில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பி வாதியின் பேட்டி 97915 53358 லிருந்து குறுஞ்செய்தியில் இருந்த லிங்கில் உள் நுழைந்து விவரங்களை பதிவேற்றம் செய்து அதில் உள்ள பொருட்களை பெற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்று இருந்ததை நம்பி 16 தவணையாக ரூபாய். 82,400/- பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இழந்த தொகையை ரூபாய் 82,400 மீட்க்கப்பட்டு ப ராமமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பாராட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.எஸ். செல்வராஜ் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம் அவர்கள்/சைபர் கிரைம் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திருமதி. தேவி அவர்கள், உள்ளிட்ட சைபர் கிரைம் குழுவினரை வெகுமதி அளித்து பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி