தேனி : தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தொலைபேசிக்கு விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்த நிலையில் தேனி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்கள் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக் (CYBER CRIME) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.R.அரங்கநாயகி, உதவி ஆய்வாளர் திரு.R.தாமரைக்கண்ணன் மற்றும் காவல் நிலைய காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை அறிந்து டெல்லி விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட 5 சைபர்கிரைம் குற்றவாளிகளை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக பணிபுரிந்து சைபர் கிரைம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் தொலைபேசிக்கு முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது..