வேலூர்: நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 06.12.2021 வேலூர் அப்துல்லாபுரம் அரசு ITI கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இணையவழி குற்றங்கள் நடந்தால் புகார் அளிக்க வேண்டிய http;//cybercrime. gov. in லிங்கு குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் மூலமாக பணத்தை இழக்க நேரிட்டால் 155260 என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும்,
மேலும் ஆன்லைன் மூலமாக அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருகிறோம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று கூறி கல்லூரி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.