பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள்
உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.சுப்ரமணி அவர்கள் ஆலோசனையின்படி காவல் ஆய்வாளர் திருமதி.A.கலா, உதவி ஆய்வாளர் திரு.S.மனோஜ் மற்றும் காவலர்கள் இணைந்து இன்று *01.10.2021-ம் தேதி* பெரம்பலூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியில் அரசு பணிபுரிந்து
ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வருவோர்கள் அனைவரையும் அழைத்து சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தும், தற்சமயம் இணைய தளத்தில் எந்த வகையான குற்றங்கள் நடைப்பெறுகின்றது என்பது குறித்தும், அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை