திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் வழிகாட்டுதலின் படி, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. A.C.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் இன்று 07.05.2024 திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் பணகுடி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டியும் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் சோதனை முயற்சியாக மாலை மலர் பத்திரிக்கை விநியோகஸ்தர் உடன் இணைந்து 50 பத்திரிக்கையுடன் சைபர் கிரைம் விழிப்புணர்வு பிரசுரங்கள் இணைத்து அனுப்பப்பட்டது.
மேலும் இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் 1930 வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.