விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் பெண் காவலர்கள் சைபர் கிரைம் குற்றங்கள்
பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான, இலவச அழைப்பு எண் 181 மற்றும் 1098, குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல்,
ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.