திருவாரூர் : (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய பகுதியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை, வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்த பொதுமக்களிடம் பெருகி வரும் சைபர் கிரைம் சம்பந்தமான இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
மேலும், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App களில் குறைந்த வட்டியில் உடனடி கடன்கள், போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள், வங்கி மோசடிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.