தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், தேனி தொழில்பயிற்சி மையம், மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.R.அரங்கநாயகி அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.S.தாமரைக்கண்ணன் அவர்கள், திரு.P.அழகுபாண்டி (தொழில்நுட்பம்) அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும்,
முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி,மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்குகளுக்கு பதில் வைக்க வேண்டாம் என்றும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 155260, மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கியும் பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வினை வழங்கினர்.