கோவை: கோவை மாவட்ட சைபர் க் கிரைம் கூடுதல் .எஸ்.பி., சங்கு கூறியதாவது:
பொதுவாக தற்போது, சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப் புறத்தினர் மற்றும் முதியவர்களை குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன.இதைத்தடுக்க, வங்கியில் இருந்து அழைப்பது போல், போன் அழைப்புகள் வரும்போது பதற்றப்படாமல் இருக்க வேண்டும். மொபைல்போனுக்கு வரும் எந்த ஒரு தேவையற்ற அழைப்புகளையும், தகவல்களையும் தவிர்க்க வேண்டும்.
பென்ஷன்தாரர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை, பாதுகாப்புடன் கையாள வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தங்களது ஓ.டி.பி., எண்களை வேறு யாருக்கும் பகிரக்கூடாது. விழிப்புடன் இருந்தால் மோசடிகளை தடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.