மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.7.24) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Cyber Crime) முனைவர் திரு.K. சிவசங்கர் தலைமையில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள செய்யவேண்டியவைகள் குறித்தும், வலைதளங்களில் தங்கள் சுயவிவரங்களை பதிவிடாமல் இருத்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளில் கடைபிடிக்க வேண்டியவைகளையும் எடுத்துக்கூறி சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண். 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி, செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.