திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களை திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை செய்து சுமார் 05 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் இன்று உரியவர்களிடம் ஒப்புவித்தார். மேலும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.