கோவை : இந்துஸ்தான் கல்லூரியில் “இந்திய அதிகாரிகள் சங்கம்” சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற நபர்களை குறிவைத்தல், சமூக ஊடக தளங்களைக் கையாளுதல், பெற்றோரின் கட்டுப்பாடு மற்றும் OTP முன்னெச்சரிக்கைகளின் சமீபத்திய போக்குகள்,என்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக ஊடக தளங்களில் நாம் தரும் தகவல்களை எப்படி பாதுகாப்பது, தகவல் திருடும் செயலிகள் மற்றும் ஆபாச செயலிகளிலிடம் இருந்து பெற்றோர் கட்டுப்பாடு என்ற தேர்வு மூலம் நம் குழந்தைகளை பாதுகாப்பது, முழு மோசடிகள், இணைப்பு மோசடி, 2 படி அங்கீகாரம் போன்றவை குறித்தும் இவற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது குறித்துகோவை காவல் ஆய்வாளர் திரு.அருண், தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்