திருநெல்வேலி: மோசடி செய்பவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக போலியான நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு வங்கியிலிருந்து அனுப்புவது போன்று போலியான SMS Header மற்றும் LINK போன்றவைகள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி விபரங்களை மோசடியாக பெற்று பண மோடியில் ஈடுபடுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
1. தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் அல்லது குறுஞ்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனம் நம்பகமானது தான் என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்.
2. எந்தவொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ATM Card , CREDIT Card விவரங்களை தொலைப்பேசி வாயிலாக கேட்கமாட்டார்கள் என்ற விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்கவேண்டும் .
3.ஒருவேளை நீங்கள் இதுபோன்று போலியான SMS கள் மூலம் மோசடி செய்யப்பட்டிருந்தால் https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்.