பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமதி.கலா மற்றும் அவரது குழுவினர்.
இன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாகங்கள், கடை வீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணையதளத்தில் நடைபெற்று வரும் குற்றங்கள் பற்றியும்,
அவற்றிலிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்