ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு. ஜவகர் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( சைபர் கிரைம் பிரிவு) திரு. ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் திருமதி. சித்ராதேவி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு .பாரதிராஜா, தலைமை காவலர்கள் திரு.சதீஷ், திருமதி.பிரியா மற்றும் காவலர்கள் திரு.அப்துல் ரகுமான் , திரு.கௌரி சங்கர், திரு.நவீன்குமார், திரு.சுரேஷ்குமார்,திரு. புவனேஸ்வரன் ஆகியோர்களின் உதவியுடன் பொது மக்களிடம் ஆன்லைன் டாஸ்க் கம்ப்ளீட் பிராடுகளில் ஈடுபட்டு வந்த நந்தகோபாலன் மற்றும் சாமிநாதன் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் ரொக்கம் சுமார் 6,72,600, சிம் கார்டு -08,ஏடிஎம் ஸ்வைப் மிஷின்-01, மொபைல்-07, செக் புக்-15, ஏடிஎம் கார்டு-19 போன்றவற்றை மீட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.