கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின், அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்களின், மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள், தலைமையில் (01.08.2023) தேதி வண்டிப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும், இதை பற்றி தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறித்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.