திண்டுக்கல்: நாட்டின் 75-வது சுதந்திரதின வைர விழாவை கொண்டாடும் விதமாக (CRPF)-எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் இந்திய நாட்டின் தென்கோடிப் பகுதியான கன்னியாக்குமரியிலிருந்து தலைநகரான டெல்லி ராஜ்கோட் வரை சுமார் 50 -வீரர்கள் கொண்ட குழுவினர் சைக்கில் பேரணி சென்று வருகின்றனர் .
இந்நிலையில் இன்று திண்டுக்கல் வந்த அவர்களை மாவட்ட எல்லைப்பகுதியான கொடைரோடு அருகே காமலாபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் பூச்செண்டு மற்றும் மலர்மாலை அணிவித்து வரவேற்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மேலும் (CRPF) வீரர்களின் வைரவிழா சைக்கில் பேரணி சிறக்க வாழ்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் தானும் அவர்களுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு சுமார் 50-கி.மீட்டர் தொலைவான ஒட்டன்சத்திரம் வரை சென்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக ஏற்பாடு செய்து வீரர்களை உற்சாகப்படுத்திய நிலக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.முருகன் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகலெட்சுமி ஆகியோர் ராணுவ வீரர்களை பாராட்டி இனிப்பு வழங்கி ஊட்டசத்து குளிர்பானங்கள் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.