கோவை : கோவை மாவட்டம் ஆலந்துறை பெரியநாயக்கன்பாளையம் வால்பாறை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை போலீசார் நேற்று அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது ஆலந்துறை பக்கம் உள்ள ஆற்றுபடுகை கோட்டைக்காடு பகுதியில் சேவல் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் 55 செந்தில்குமார் 50 லோகநாதன் 22 பாலகிருஷ்ணன் 30 ஆகியோர்கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து 2600 பணம் 2 சேவல் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பெரியநாயக்கன்பாளையம் சோமையனூர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடத்திய சூர்யா 27 அஜிஸ் 24 விக்னேஸ்வரன் 24 ஜீவானந்தம் 26 சசிகுமார் 42 ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல் களும் பணம் ரூ 350 பறிமுதல் செய்யப்பட்டது ஆழியார் கம்மாளப்பட்டி அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாகஅதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் 23 ஷியாம் குமார் 18 ஆறுமுகம் 34ஆகியோர் கைது செய்ய பட்டனர் 2 சேவல் பணம் ரூ 250 பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்