சேலம்: சேலம் மாநகர காவல், ஊர் காவல் படை பிரிவில் பணிபுரிந்து வந்த G.பத்மஅசோகா என்பவர் கடந்த 06.06.2021 -ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இன்று 24.02.2022- ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேமநல நிதியில் இருந்து ரூபாய் 15,000/- ஐ இறந்து போன பத்மஅசோகா என்பவரின் தாயார் திருமதி.G.சாந்தி என்பவரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.