சேலம் : சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அங்கப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் உதவியுடன், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு அலுவல்களின் போது தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு செய்ய உதவிடும் ரூ 45,000/- மதிப்புள்ள 10 இரும்பு தடுப்புகள் (barricad) தயார் செய்து, அதில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு படங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு படங்களை இடம்பெறச் செய்து, 16.02.2020 ஆம் தேதி சேலம் மாநகர காவல்துறைக்கு வழங்கியுள்ளார். காவல் உதவி ஆய்வாளரின் இச்செயலை, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.