சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்கள் தலைமையில் அனைத்து காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு லைன்மேட்டில் உள்ள சேலம் மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் ஒன்று கூடினார்கள்.
காவல் ஆணையாளர் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, பெண்களுக்கான கோல போட்டி மற்றும் இசை நாற்காலி போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
சேலம் மாநகர காவல்