சேலம் : சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று 23.07.2020 ஆம் தேதி சேலம் மாநகர காவல்துறையின் சோதனைச்சாவடி செயலி (Salem City Police Check Post App) தொடக்க விழா நடைபெற்றது.
இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் கலந்துகொண்டு இந்த செயலியினால் என்னென்ன பயன்கள் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் இடையே விரிவாக எடுத்துக் கூறி, செயலியினை தொடங்கி வைத்தார்கள்.
இச்செயலியின் மூலம் காவல்துறை சோதனை சாவடிகளில் பயணிகள் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சில நிமிடங்களிலேயே இந்த செயலியின் மூலம் பதிவு செய்துகொள்ள இயலும்.
மேலும் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்கள், தலைமறைவு குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் இன்னும் பல்வேறு வசதிகளுடன் இந்த செயலி செயல்பட உள்ளது. இச்செயலினை திரு.P.சதீஷ் மற்றும் அவரது குழுவினர் தயாரித்து சேலம் மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளார்கள்.
இதற்கு திரு.முத்துமாணிக்கம் (D.S.P Retd.), டாக்டர்.D.சசிக்குமார் (சசி கண் மருத்துவமனை சேலம்) ஆகியோர்கள் உதவி செய்துள்ளார்கள். இவ்விழாவில் காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.M.சந்திரசேகரன் அவர்கள், காவல் துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து திரு.S.செந்தில் அவர்கள், காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.