சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் இன்று 28.12.2019 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருமகள் பைபாஸ் அருகே உள்ள மீனாட்சி இந்தியா லிமிடெட் எனும் ஆயத்தஆடை நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார் IPS., அவர்கள் கலந்து கொண்டு, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியின் பயன்பாடு குறித்தும், பதிவிறக்கம் செய்வது குறித்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 400 மேற்பட்ட பெண் ஊழியர்களிடையே விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு.P.தங்கதுரை மற்றும் காவல் துணை ஆணையாளர், குற்றம் மற்றும் போக்குவரத்து, திரு.S.செந்தில் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. M. தீபான்சி
தேசிய பொது செயலாளர்
NAI – சமூக சேவை குடியுரிமை நிருபர்கள் பிரிவு
சேலம்