சேலம் : சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜெயராஜ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற, சேலம் சின்னதிருப்பதி சேர்ந்த முஸ்தபா என்ற முகமது என்பவனை, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு.தங்கவேல் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர், 04.01.2020 ஆம் தேதி குற்றவாளியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை, சேலம் மாநகர காவல் ஆணையர் திரு செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
சேலம் மாநகரில் மற்றொரு வழிப்பறி கொள்ளையன் ஆன இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூமி நாயக்கன்பட்டி சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் ஒரு கிலோ வெள்ளி மற்றும் பணத்தை வழிப்பறி செய்த சேலம் பாளையத்தை சேர்ந்த, ரகுநாதன் என்பவனை, 05.01. 2020 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு, அனுப்பி வைத்த இரும்பாலை காவல்துறையினரை, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. M. தீபான்சி
தேசிய பொது செயலாளர்
NAI – சமூக சேவை குடியுரிமை நிருபர்கள் பிரிவு
சேலம்