நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நேற்று 22.05.2022 மதியம் சுமார் 12.00 மணி அளவில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்ன சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு.வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு வழங்கினார். தமிழக காவல்துறையினரின் பணி மிகவும் இன்றியமையாதது. காவல் துறையினர் இல்லாமல் தமிழகத்தில் அமைதி நிலவாது. அவர்களால் தடுக்கப்பட்ட கலவரங்கள், காப்பாற்றப்பட்ட உயிர்கள், மீட்கப்பட்ட கொள்ளை போன பொருட்கள் ஏராளம்.
சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் திரு.வெங்கடேசன், அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை சிறப்பாக வழிநடத்தி, குற்றமில்லா சேலம் மாநகரை உருவாக்கிட சீரிய முறையில் பணியாற்றி வருகின்றார். ஏழை எளிய மக்களிடம் மிகுந்த கனிவோடு, உணவு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி, மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு மாநில வடக்கு மண்டல ஊடகச் செயலாளர் திரு. முஹமத் மூசா, மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு.ஜாபர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். நீங்களும் உண்ணுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கு உண்ண கொடுங்கள் என்ற திருகுரான் வாசகத்திற்கு ஏற்ப ஏழைகளை தேடி சென்று உணவு வழங்கும் உன்னத பணியினை சிறப்பாக செய்து வரும் திரு. முஹமத் மூசா மற்றும் திரு.ஜாபர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
[embedyt] https://www.youtube.com/watch?v=dNNE_DymBto[/embedyt]