சேலம் : சேலம் விநாயகா மிஷன் அன்னபூர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி ராஜேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு போக்குவரத்து உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படைப்பின் காவலர்களைக் கொண்டு மைண்ட் ஷோ நடத்துவதற்கு ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார். அந்த குழுவினர் சைபர் கிராம் குறித்த விழிப்புணர்வு மைம் ஷோவை கல்லூரி நிகழ்ச்சியில் நடத்தினர். இது கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மேற்படி குழுவினரை சேலம் சரக காவல்துறை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார் மேலும் சரகம் முழுவதும் அடிக்கடி இது மாதிரியான விழிப்புணர்வு மைம் ஷோ நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்