சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள இன்று 14.12.2022-ஆம் தேதி காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரையிலானவர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்களின் தலைமையில் “போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள “Each One Reach One” என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு காவலர் என்ற வீதம் நியமிக்கப்பட்டு, பள்ளிகளில் போதைப் பழத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு நடைபெற்றது குறித்தும், மேலும் சேலம் மாநகரத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தலைமையகம் திரு.S.ராதாகிருஷ்ணன் அவர்களும், தெற்கு திருமதி.S.P. லாவண்யா அவர்களும், வடக்கு திரு.M.மாடசாமி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சேலத்தில் இருந்து –
குடியுரிமை நிருபர் பீ.காதர்பாஷா