சேலம் : சேலம் சமீபத்தில் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவத்தினை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக சில விரும்பத்தகாதவர்கள் பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து ஏதோ தற்போது தான் நடைபெறுவது போல சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள், இதனால் மக்களிடையே குழப்பமும் பீதியும் எனவே சேலம் மாவட்டத்தில் இதுபோல சித்தரிக்கப்பட்ட பழைய வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை உண்மைத் தன்மை என்று வெளியிடுபவர்கள் மீது போதிய விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை குறித்து (94899 17188) என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்