சேலம் : சேலம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் அறிவுரையின்படி சேலம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மறைந்த காவல்துறை அதிகாரிகள் ஆளுநர்கள் அமைச்சுப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினரின் வாரிசுகள், மற்றும் துணைவி/ துணைவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிட 2022 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள காவல் துறையினரின் வாரிசுகள் மற்றும் துணைவி /துணைவர்கள் சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் (WARD/SPOUSE) சான்றிதழ் பெற்று கீழ்க்கண்ட இணையதளம் முகவரியில் https: // docs.google.com /forms/d/e/1 FAIPQLScZJXL8CFfXqwihiiE 2M2QbHnpUYfaJTvtt442Pz6zPT4C4RA / viewform (21/12/2002) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்