சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தில் சேலம் எஸ்.பி அருண் கபிலன் திடீரென இன்று ஆய்வு செய்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக சேலம் எஸ்பியாக பதவியேற்ற அவர் ஓமலூர் காவல் நிலையத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். தொடர்ந்து ஓமலூர் உட் கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி மற்றும் ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தேங்கியுள்ள கொல்லை, அடிதடி வழக்குகள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நிலுவை வழக்குகளை ஆய்வு செய்தார். மேலும் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடம் மற்றும் திருட்டு சம்பங்களை குறைப்பதற்கு இரவு நேரத்தில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார். தொடர்ந்து காவல் நிலையத்தில் காவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையை ஆய்வு செய்து முறையாக அந்த அறையை தூய்மை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இதில் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, ஓமலூர் காவல் ஆய்வாளர் செல்வம் கூறியதாக தெரிகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்