சேலம் : சேலம் மாநகர காவல் நிலையங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாநகரின் 18 காவல் நிலையங்களில் 3799 புகார் மனுக்கள் பெறப்பட்டது. வரவேற்பாளர்கள் கணினியில் மனுவின் விவரத்தைத் பதிவு செய்ததும், நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் இருந்து காவலர்கள் மூலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனுதாரரின் மனு மீது காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை மற்றும் காவல் நிலையங்களில் மனுதாரருக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
அவ்வாறு நடைபெற்ற மனுக்கள் மீதான விசாரணையில் மாநகரில், 311 மனுதாரர்கள் தங்களுக்கு மனுவிசாரனையில் திருப்தி இல்லை என தெரிவித்தனர்.
அவ்வாறு திருப்தி இல்லை என கூறிய மனுதாரர்களை இன்று 07.03.2020 ஆம் தேதி நேரில் வரவழைத்து, சேலம் மாநகரம், சுந்தர் லாட்ஜ் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வன்னியர் குல சத்ரியர் திருமண மண்டபத்தில் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார் IPS அவர்கள் தலைமையில் மனுக்கள் மீதான மறுவிசாரணை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரு.P.தங்கதுரை காவல் துணை ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு.S.செந்தில் துணை ஆணையாளர், குற்றம் மற்றும் போக்குவரத்து, கூடுதல் காவல் துணை ஆணையாளர், அனைத்து சரக காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டனர்.