சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி, சேலம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் மற்றும் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பலனாக, மொத்தம் 1,551 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் காலத்தில் அமைதியான சூழலை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்
















