சேலம் : காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி (25.02.2026) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனுக்களை நேரடியாக பரிசீலித்து விசாரணை மேற்கொண்டார். மனுக்களுக்கு விரைவான தீர்வு வழங்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்
















