சேலம்: சேலம் மாநகர் , சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள சாய்பாபா நகரில் வசிக்கும் விவேக் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (34) இன்று காலை 07.30 மணி அளவில், தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு சென்று விட்டு, சீலநாயக்கன்பட்டி அழகு நகரில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மெட் அணிந்து இருவர், கண் அமைக்கும் நேரத்தில் பிரியதர்ஷினியின் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
10 சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை அன்னதானப்பட்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். காலை வேளையில் கடைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணிடம் தங்க நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.