மதுரை : சாலை விதிகளை மீறும் சேர் ஆட்டோக்களை உடனடியாக பறிமுதல் செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
(1) சாலையில் அதிக வேகமாக வாகனங்களை ஒருபோதும் இயக்ககூடாது.
(2) அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றக்கூடாது.
(3)பேருந்து நிறுத்தங்கள் சாலையின் நடுவே அடிக்கடி வாகனங்களை நிறுத்தக் கூடாது. சாலையின் ஓரத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கி விட்டுச் செல்ல வேண்டும்.
(4) தங்களது வாகனங்களை வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ திருப்பும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு சுட்டிக்காட்டிய (indicator) பின்னரே வாகனத்தை திருப்ப வேண்டும்.
(5) வாகனத்திற்கு உரிய அனைத்து ஆவணங்களையும் வாகனத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
(6) அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை உபயோகப்படுத்தக்கூடாது.
(7) கட்டாயம் சீருடை அணிந்து வாகனத்தை சாலையில் இயக்க வேண்டும்.
(8) பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஒருபோதும் இயக்கக் கூடாது.
(9) குடிபோதையில் வாகனத்தை இயக்க கூடாது.
மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளையும் அனைத்து சேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பின்பற்றவேண்டும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்