திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி முன்னீர்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரதீப் I.P.S அவர்கள், இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் ஜாதி,மதம் பாகுபாடின்றி ஒவ்வொருவரும் பழக வேண்டும், நம் வீட்டில் உள்ள குழந்தைகள் மத்தியில் ஜாதி பற்றிய எண்ணங்களை வளரவிட்டால், அதுவே அவர்களுக்கு பிற்காலத்தில், பழிதீர்க்கும் எண்ணங்களை வளர்த்து விடும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி