தூத்துக்குடி : சேரகுளம் காவல் நிலையத்தில், முக்கிய வழக்கு கோப்புகளையும், நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் இன்று (03.08.2022) ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடியில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி, திரு. துரைசிங்கம், உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.