திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சமீப காலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக சாலைகள் மிகவும் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தன இந்த நிலையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் மேலூர் வரை சேதம் அடைந்த சாலைகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் சேதம் அடைந்த சாலைகளை மிக விரைவில் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். ரமணா நகர் வட்டாரப் பொது வியாபாரிகள் நல சங்க செயலாளர் R. மோகன் சட்டமன்ற உறுப்பினரிடம் சாலையை சீரமைக்க வேண்டி கோரிக்கை வைத்தார்.. சட்டமன்ற உறுப்பினர் வரும் திங்கட்கிழமை முதல் சாலையை சீரமைக்கும் பணி நடைபெறும் என அவர் தெரிவித்தார் அவருடன் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் 16வது வார்டு கவுன்சிலர் நக்கீரன், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செல்வகுமார், ஆதிசேஷன், பூபதி, பாண்டி, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு