சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன்,75 இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மன், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மகள் வீட்டில் வசித்து வந்தார்.

முனியப்பனுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில், மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முயன்றுள்ளார். இதற்கு அவரது மகன் மாது,35 எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி, 1 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாது நேற்று மதியம் வீட்டில் இருந்த தந்தை முனியப்பனை வெட்டி கொலை செய்து தப்பிசென்றார். தகவல் அறிந்த மாரண்டஹள்ளி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மாதுவை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.