திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையினர் மூலமாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நாய் மற்றும் பூனை ஆகிய விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமிற்கு பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணகுமார் ,கால்நடை பிரதம மருத்துவர் சீனி வேலன், மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை சம்பந்தமாக பொதுமக்களிடம் எடுத்து கூறினர். இதில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.. நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு மற்றும் மருத்துவர்கள் கால்நடை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு