மதுரை : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு கார், வேன், டூவிலர்களில் செல்வோரை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து வாக்காளருக்கு, பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் , இன்று மதுரை சோழவந்தான் அருகே மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரி எனும் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே டூவிலரில் பையுடன் வந்த வாலிபரை மடக்கி வாகன சோதனை செய்தபோது, டூவிலரில் உரிய ஆவணங்களின்றி பையில் ரூ.53900 பணத்தை வாலிபர் கொண்டு வந்தது தெரிய வந்தது. உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு வந்த அலங்காநல்லூரை சேர்ந்த பெருமாள் என்ற வாலிபரிடமிருந்த பணம் ரூ.53900 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி