திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திகிராமம் ரெயில்வே கேட் அருகே பிரதீப்(16) என்ற மாணவர் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து . செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்தே இருக்கிறது. செல்ஃபோன் கலாச்சாரம் இன்று கொள்ளை நோய் போல எல்லா தரப்பு மக்களிடமும் பரவி இருக்கிறது. நிச்சயமாக இதில் நன்மைகள் நிறைய இருந்தாலும் அதன் தீமைகளையும் உணர்ந்திருப்பது நல்லது.
ஸ்பெயின் நாட்டு கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 25 வயதுக்கு உள்பட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இது பற்றி ஒரு ஆய்வு நடத்தினார்கள் இதன் படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் தினம் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்ஃபோனை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உடலில் மேலோட்டமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவது அவர்களது மனதைப் பாதிக்கிறது. போதை மருந்து போல் செல்போன்களுக்கு இவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.
மன உளைச்சல், விரக்தி, ஏமாற்றம், கோபம் போன்றவை அதிகரிக்கிறது. எஸ்.எம்.எஸ்., `மிஸ்டு கால்’ போன்றவற் றுக்கு பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் பதட்டம் அதிகமாகிறது. சுவீடன் நாட்டில் 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 21 மாணவர்களிடம் செல் ஃபோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயப்பட்டது இதில் செல் ஃபோன் அதிகம் பயன்படுத்தும் 20 மாணவர்கள் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களால் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியாததுடன் பொறுப்பில்லாமல் செயல்படும் மனபோக்கும் காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்களது உடல் நிலையையும் இது பாதிக்கும் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இறுதியாக மனக்குழப்பம், பிரச்சனைகளை அணுகும் திறன் இன்மை போன்றவற்றால் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.