சென்னை: குன்றத்தூர், M.M.அவென்யூ, ஜான்சி ராணி தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெற்று வரும் இடத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச்சேர்ந்த சுஜாவுதீன், வ/26 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
கடந்த 11.06.2021 அன்று அங்கு வந்த 3 நபர்கள் மேற்படி சுஜாவுதீனை கத்தியைக்காட்டி மிரட்டி சுஜாவுதீனிடமிருந்து 1 செல்போன் மற்றும் பணம் ரூ. 2,000/-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றது குறித்து சுஜாவுதீன் T13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
T13 குன்றத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தர்மன், வ/24 குன்றத்தூர் என்பவரை கைது செய்தனர்.
மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு செல்போன் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ள லோகு, ஜீவா ஆகிய இரண்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட தர்மன் என்பவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்