சென்னை: வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி பிரேம்லால் உப்பாத்தியா , வ/22, என்பவர் 16.05.2021 அன்று வேலை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக ரஞ்சித் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் . அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பிரேம்லால் கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்று பிரேம்லால் சத்தம் போடவே தப்பிச் சென்றனர். . சத்தம் கேட்டு சற்று தொலைவில் கண்காணிப்பு பணியிலிருந்த J4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆளிநர்கள் விசாரணை செய்து செல்போன் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட 1.நதீம், வ/27, சேப்பாக்கம், 2.சையது ஆதில் , வ/25, சேப்பாக்கம் , ஆகியோரை ஒரு மணி நேரத்தில் பிடித்து, J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.